மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அஜித்தின் 'சிக்ஸ்பேக்', பர்ஸ்ட் லுக் போஸ்டர், சமீபத்தில் வெளியான 'சர்வைவா' சிங்கிள் டிராக் என 'விவேகம்' பட ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க படம் பற்றிய பரபரப்பும் எகிறிக்கொண்டே இருக்கிறது. 'விவேகம்' படத்தின் டீசர், அஜித்தின் கேரியரில் குறுகிய காலத்தில் முதல்முறையாக 1 கோடியைத் தாண்டிய டீசர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.
இந்நிலையில், நடிகர் விவேக் ஓபராய் தான் 'விவேகம்' படத்தின் வில்லன் என வெளிவந்து கொண்டிருக்கும் தகவலை இயக்குநர் சிவா மறுத்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தான் விவேக் ஓபராய் நடிக்கிறார் என்ற தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.
அப்படியென்றால், டீஸரில் இடம்பெறும் 'தி மோஸ்ட் வான்டட் கிரிமினல்' என்ற டயலாக்கிற்குச் சொந்தமானவர் யார்? படத்தின் வில்லன் யார்? விவேகம் படத்தின் வில்லன் வேறு யாருமல்ல.... அஜித் குமார் தான் என்கிறார்கள். அஜித் வில்லன் என்றால்.... அவரை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராய் இருக்கலாம் என தெரிகிறது.
மொத்தத்தில், அஜித் - விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு தியேட்டரில் அனல் பறக்கப்போவது நிச்சயம்.