மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸும், கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்- 'வேலையில்லா பட்டதாரி-2'. தனுஷுடன் காஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் முதலானோர் நடிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவிருக்கும் 'விஐபி-2' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மும்பையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கு தமிழ் மீடியாக்களை முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க, 'விஐபி-2' படத்தை தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். கபாலி படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விநியோககஸ்தர்கள், தங்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்தால் தான் 'விஐபி-2' படத்தை வெளியிட அனுமதிப்போம், இல்லை என்றால் ரெட் கார்டு போடுவோம் என்று கலைப்புலி தாணுவிடம் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் செவிசாய்க்காவிட்டால், 'வேலையில்லா பட்டதாரி -2' வெளிவருவதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியிருக்கிறது.