மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விமல் நடித்த களவாணி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கேரளத்து நடிகை ஓவியா. அதன்பிறகு சுந்தர்.சியின் கலகலப்பு படத்தில் கவர்ச்சி நாயகியாக உருவெடுத்தவர், அஞ்சலியுடன் இணைந்து குத்துப்பாட்டு நடிகைகளுக்கு இணையாக அதிரடி ஆட்டமும் ஆடினார். என்றாலும், பின்னர் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வந்ததால் அடுத்தபடியாக படவாய்ப்புகள் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கிறார் ஓவியா.
இந்த நிலையில், தற்போது அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கும் ஓவியா, விஷ்ணு தயாரித்து, நடித்து வரும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்க, ஓவியா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுகிறார். மேலும் இரண்டு காட்சிகளிலும் நடிக்கிறாராம். டைரக்டர் எழிலின் உதவியாளர் செல்லா இயக்கும் இந்த படத்தில் ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், யோகிபாபு, கருணாகரன், சிங்கமுத்து, மன்சூரலிகான் என ஒரு பெரிய காமெடி பட்டாளமும் நடிக்கிறார்கள்.