மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சாட்டை படத்தை இயக்கிய அன்பழகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் ரூபாய். காட் பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் பிரபு சாலமன் தயாரித்துள்ளார். கயல் படத்தில் நடித்த ஜோடிகளான சந்திரன், ஆனந்தி இதிலும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கிஷோர் ராமச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். வி.இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். பல்வேறு பட விழாக்களுக்கு சென்று திரும்பியுள்ள படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படம் பற்றி இயக்குனர் அன்பழகன் கூறியதாவது:
பணம் எல்லோருக்கும் அவசியம் தான்.. அதை நியாயமாக சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம். நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். இதை தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.
பரணி (கயல் சந்திரன்) பாபு ( கிஷோர் ரவிச்சந்திரன்) இருவரும் நண்பர்கள். கடனுக்கு லாரி வாங்கி தொழில் செய்கிறார்கள். இரண்டு நாளைக்குள் லாரிக்கு தவணை கட்டவில்லை என்றால் ,இவர்களின் ஒரே சொத்தான லாரியை சேட்டு பறிமுதல் செய்துவிடுவார் என்ற நிலையில் தேனியில் இருந்து சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு சவாரி வருகின்றனர். வந்த இடத்தில் குங்குமராஜன் (சின்னி செயந்த்), பொன்னி (கயல் ஆனந்தி) இருவரையும் சந்திப்பதால் இவர்களோடு சேர்ந்து வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்கள்.இறுதியில் அந்த பிரச்சனையில் இருந்து நால்வரும் மீண்டார்களா? இல்லையா? என்ற பதிலுக்காக பயணம்தான் இந்த ரூபாய். இதை ஒரு நேர்க்கோட்டில் பயணிக்கும் மாதிரியான தெளிவான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறோம். ஜனரஞ்சகமான படமாக ரூபாய் இருக்கும் படம் விரைவில் வெளிவர உள்ளது என்றார் இயக்குனர் எம். அன்பழகன்.