மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பல வெற்றிப் படங்களை கொடுத்த பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் மலையாளப் படம் 'வில்லன்'. இந்த படத்தில் மோகன்லால் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்.
மோகன்லாலுடன் இணைந்து விஷால், ஹன்சிகா மோத்வானி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ராஷிகன்னா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தை தமிழில் 'லிங்கா' மற்றும் பல கன்னட படங்களை தயாரித்த 'ராக்லைன்' வெங்கடேஷ் தயாரிக்கிறார்.
வில்லன் படம் '8கே' தொழில்நுட்பத்தில் படமாக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் எடுக்கப்படும் முதல் படம் இது தான் என்று கேரள பத்திரிகையில் வில்லன் படம் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், நயன்தாரா நடிப்பில் தமிழில் உருவாகி வரும் 'கொலையுதிர்காலம்' படம்தான் இந்தியாவிலேயே 8கே தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் படம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
யார் சொல்வது உண்மை?