கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
முல்லைப் பெரியாறு விவகாரம், தமிழ்நாடு-கேரளா இடையே பெரும் பிரச்சனையாக வெடித்துள்ள நிலையில், மலையாள நடிகர் மம்முட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் சுமார் 15 நிமிடம் வரை நீடித்த இந்த சந்திப்பு குறித்து மம்முட்டி பதிலளிக்க மறுத்துவிட்டார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த மம்முட்டி தனது காரில் ஏறி உடனடியாக புறப்பட்டுச் சென்றார். கேரளாவில் உள்ள மலையாள சினிமா அமைப்புகள், முல்லைப் பெரியாறு விவகாரத்திற்காக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக முதல்வருடனான மம்முட்டியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.