'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள படம் பேவாட்ச். டுவைன் ஜான்சன் நடித்துள்ள இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள், நீச்சல் உடை அணிந்து லிப் லாக் முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார். படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.
பேவாட்ச் படத்துக்கு தணிக்கை குழு வழங்கி உள்ள ஏ சான்றிதழை மறைத்து விளம்பரம் செய்யப்படுகிறது. தியேட்டர்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே படத்தை தடை செய்ய வேண்டும்" என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வைகுந்த் கஸ்தூரி ரங்கன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி உள்ளிட்ட அமர்வு விசாரித்தது. வாத பிரதிவாதங்களை கேட்ட நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
ஏ சான்றிதழ் பெற்ற படத்தை 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்ப்பதை தடுக்கும் கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே இப்படத்தை 18 வயதுக்கு குறைவானவர்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்காமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறி படத்துக்கு தடைவிதிக்க மறுத்தது நீதிமன்றம்.