முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
படம் வெளியான அன்றே... முதல்காட்சி ஓடி முடிவதற்குள்ளாகவே போலியான சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டு, அதை வெற்றிப்படம் போன்று விளம்பரம் செய்வது கோடம்பாக்கத்தில் வாடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் கூட இரண்டு படங்களின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. ஆனால், பல ஊர்களில் படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே அந்த படங்களை தூக்கிவிட்டனர் என்பதே உண்மை.
இப்படிப்பட்ட பொய்யான வெற்றிப்படங்களுக்கு மத்தியில் பாகுபலி-2 படம் உண்மையான வெற்றியை பெற்றது. இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் பாகுபலி 2. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி 5 வாரங்களை கடந்தும், தமிழகமெங்கும் பல தியேட்டர்களில் வசூலில் முதல் இடத்தில் உள்ளது.
எந்திரன் படத்தின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்தது பாகுபலி 2. இதற்கு பிறகு பல படங்கள் வெளியானாலும், அந்தப் படங்களின் வசூலைப் பின்னுக்குத் தள்ளி இன்னமும் வசூலில் முதல் இடத்திலேயே நீடித்து வருகிறது பாகுபலி 2. இதில் என்ன வேடிக்கை தெரியுமா? பாகுபலி-2 கிடைக்காத தியேட்டர்களில் தான் சமீபத்தில் சக்சஸ் மீட் கொண்டாடிய படங்கள் ரிலீஸாகின. ஆனால், அந்தப் படத்தை தூக்கிவிட்டு தற்போது பாகுபலி-2 படத்தை திரையிட்டுள்ளனர்.
இதுதான் உண்மையான வசூல் சாதனை....!