மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியிடவிருந்தனர். தெலுங்குப் பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் மற்றும் கன்னட தயாரிப்பாளரும், ராஜ்குமாரின் மனைவியுமான பர்வதம்மா ஆகியோரின் மறைவால் 'ஸ்பைடர்' படத்தின் டீஸர் வெளியீட்டை ரத்து செய்துள்ளனர்.
பின்னர் இன்று (ஜூன் 1) காலை 10.30 மணிக்கு வெளியானது. மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் இரண்டு மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
ஸ்பைடர் டீசர் வெளியாகி, ஐந்து மணி நேரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அது மட்டுமல்ல 1 லட்சத்துக்கு 20 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. அஜித்தின் வேதாளம் உட்பட பல படங்களின் யூடியூப் சாதனையை ஸ்பைடர் படத்தின் டீசர் முறியடித்துள்ளது.