Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் ரீமேக் ஆகிறது மை பிக் பாதர்

31 மே, 2017 - 10:35 IST
எழுத்தின் அளவு:
My-big-father-to-be-remade-in-Tamil

கடந்த 2009ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் மை பிக் பாதர். உயரம் குறைவான காமெடி நடிகர் பக்ருவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். உயரம் குறைவாக உள்ள தந்தைக்கும், சராசரி உயரம் கொண்ட மகனுக்கும் இடையிலான உணர்வுகளை சொல்லும் படம். இதில் தந்தையாக பக்ரு நடித்தார். மகனாக ஜெயராம் நடித்தார். ஜெயராம் ஜோடியாக கனிகா நடித்தார். மகேஷ் பி.ஸ்ரீனிவாசன் இயக்கினார். அலெக்ஸ் பால் இசை அமைத்தார். விபின் மோகன் ஒளிப்பதிவு செய்தார்.


மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை அதன் இயக்குனர் மகேஷ் பி.ஸ்ரீனிவாசனே, தமிழில் ரீமேக் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பக்ரு நடித்த கேரக்டரில் இங்குள்ள குள்ளமணி உள்ளிட்ட சில நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு காமெடி இமேஜ் மட்டுமே இருக்கிறது. ஆனால் பக்ரு குணசித்ர நடிகராகவும் தமிழ் நாட்டில் அறியப்பட்டிருக்கிறார் இதனால் அவரையே நடிக்க வைக்கிறார்கள். ஜெயராம் கேரக்டரில் நடிக்க முன்னணி இளம் நடிகர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். தனுஷ் அல்லது விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று தெரிகிறது.


"மலையாளத்தில் படம் வெளியானபோதே பலர் தமிழ் ரீமேக் உரிமை கேட்டு வந்தார்கள். ஆனால் எனக்கு ஒரு தமிழ் படம் இயக்கும் ஆசை இருந்ததால் கொடுக்கவில்லை. தமிழுக்கு ஏற்றபடி ஸ்கிரிப்ட்டில் கொஞ்சம் மாறுதல் செய்து இப்போதுதான் தயாராகி இருக்கிறேன். ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது. விரையில் முறையான அறிவிப்பு வரும்" என்கிறார் இயக்குனர் மகேஷ்.பி.ஸ்ரீனிவாசன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in