மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இருமுகன் படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் படம் ஸ்கெட்ச். விஜயசந்தர் இயக்கி வரும் இந்த படத்தில் தமன்னா, ஸ்ரீபிரியங்கா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தில் விக்ரமுடன் நடித்திருப்பது பற்றி ஸ்ரீபிரியங்கா கூறுகையில், விக்ரம் படம் என்பதால்தான் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க சம்மதித்தேன். அதோடு, அவர் முன்னணி நடிகர் என்பதால் முதல் நாள் படப்பிடிப்புக்கு பயந்து கொண்டே சென்றேன். ஆனால் அவரோ, ரொம்ப அன்பாக பழகினார், நடிப்பு சொல்லிக்கொடுத்தார். முக்கியமாக படப்பிடிப்பு இல்லாத மற்ற நேரங்களில் அனைவரிடமும் ஜாலியாக பழகினார். அதன்பிறகு தான் எனக்கு அவர் மீதிருந்த பயம் நீங்கியது.
மேலும், இந்த ஸ்கெட்ச் படத்தைப்பொறுத்தவரை தமன்னா நாயகி என்றாலும், நானும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறேன். நாங்கள் மூன்று பேரும் இடம்பெறும் ஒரு மான்டேஜ் சாங்கும் உள்ளது. அதனால் இந்த படம் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் படமாக அமையும். இதுதவிர மிக மிக அவசரம், பிச்சுவாகத்தி ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்திருக்கிறேன். இந்த மூன்று படங்களும் திரைக்கு வரும்போது தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கும்.
அதோடு, இதுவரை பிரபலமில்லாத நடிகர்களுடன் நடித்த நான், இனிமேல் பிரபலமான ஹீரோக்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். இதனால் ஹீரோயிசமுள்ள கமர்சியல் கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் ஸ்ரீபிரியங்கா.