7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா |
ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானவர் தமன். அதற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர இசையமைப்பாளராக மாறிவிட்டார். தமிழில் 2009ம் ஆண்டு வெளிவந்த 'சிந்தனை செய்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதே வருடத்தில் வெளிவந்த 'கிக்' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.
தமிழில் “ஈரம், காஞ்சனா, வாலு, மீகாமன், சிவலிங்கா” உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் தமிழில் இன்னும் முன்னணி இசையமைப்பாளராக வராமல் இருக்கிறார். அதே சமயம், தெலுங்கில் பல ஹிட் படங்களிலும், பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் பணியாற்றி அங்கு முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ள தமன் முதன் முறையாக ஹிந்திப் படத்தில் அறிமுகமாகிறார். பிரபல இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவகன் நாயகனாக நடிக்க உள்ள 'கோல்மால் 4' படத்தின் மூலமாக ஹிந்திக்கு அடியெடுத்து வைக்கிறார் தமன். இது பற்றிய அறிவிப்பை தமன் நேற்று வெளியிட்டுள்ளார்.