விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'துருவநட்சத்திரம்', வாலு பட இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம், இந்தப் படங்களை முடித்த கையோடு ஹரி இயக்கும் 'சாமி-2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
சூர்யா நடித்த 'சிங்கம்-3' படத்தை தொடர்ந்து 'சாமி-2' படத்தை இயக்க இருக்கிறார் ஹரி. 'இருமுகன்' படத்தை தயாரித்த 'தமீன்ஸ் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் ஷிபு தமீன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
'சாமி' படத்தின் முதல் பாகத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த த்ரிஷாவே சாமி-2 படத்திலும் முக்கிய பாத்தித்தில் நடிக்கிறார். இப்போது இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.
சாமி-2 படத்தில் இரண்டு கதாநாயகிகளில் யாருக்கு முக்கியத்துவம்? என கேள்வி எழுந்துள்ளது. சந்தேகமில்லாமல் கீர்த்தி சுரேஷுக்குத்தானாம்.
விக்ரமின் மனைவி கேரக்டரில் நடிக்கும் த்ரிஷா படத்தின் துவக்கத்திலேயே இறந்துவிடுவதுபோலவும், அதன் பிறகு விக்ரமை காதலிப்பவராக கீர்த்தி சுரேஷ் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.