மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சினிமாவில் இதுவரை 230 படங்களில் நடித்திருப்பவர் போண்டாமணி. வடிவேலுவுடன் இணைந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் இப்போதுவரை சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது தனது மகன் சாய்ராமையும் சினிமாவில் அறிமுகம் செய்கிறார்.
அதுகுறித்து போண்டாமணி கூறுகையில், நான் இலங்கையில் இருந்து நடிகராக வேண்டும் என்று தமிழ்நாட்டுக்கு வந்து நடிகராகி சாதித்து விட்டேன். வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடிக்கத் தொடங்கிய பிறகுதான் நான் பிரபலமானேன். இப்போது அவர் என் போன்ற பழைய காமெடியன்களை அழைக்கவில்லை, இருப்பினும் மீண்டும் அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், என்னைப்போலவே எனது 9 வயது மகன் சாய்ராமையும் சினிமாவில் நடிகராக்க வேண்டும் என்பது எனது ஆசை.
அதனால், அவனுக்கு நடிப்பு, சண்டை, நடனம் போன்ற பயிற்சிகளை முறையாக கொடுத்து வருகிறேன். அவனை ஒரு நல்ல டைரக்டர் படத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்து வந்தபோது, பேரரசு சார் அடுத்த மாதம் தான் இயக்கும் புதிய படத்தில் எனது மகனை அறிமுகம் செய்வதாக கூறினார். அந்த படத்தில் சின்ன வயது ஹீரோவாக என் மகன் சாய்ராம் போண்டாமணி நடிக்கிறார். முக்கியமாக, எனது மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்கக்கூடிய நல்ல நடிகராக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். அந்தவகையில், பேரரசுவின் படத்தில் அறிமுகமாகும் என மகனுக்கு அந்த படம் நல்லதொரு ஆரம்பமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் நடிகர் போண்டாமணி.