மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டி.வி அதிகம் பார்ப்பவர்களுக்கு அவந்திகாவை நன்றாக தெரியும். காரணம் பாதி விளம்பர படங்களில் அவர் நடித்திருப்பார். குறிப்பாக ஜோதிகா நடிக்கும் விளம்பர படங்களில் அவந்திகா இருப்பார். சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். தற்போது அவந்திகா ஹீரோயினாகியிருக்கிறார். ஹீரோயின் என்றால் ஹீரோவுடன் மரத்தை சுற்றி டூயட்பாடும் ஹீரோயின் இல்லை. வானரப்படை என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடிக்கிறார்.
அவரைச் சுற்றித்தான் கதை நடக்கிறது. அவரது தந்தையாக கவியரசர் கண்ணதாசன் பேரனும் அண்ணாத்துரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் நடிக்கிறார். இவர்கள் தவிர சுப்பு பஞ்சு, நமோ நாராயணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். லோகி ஒளிப்பதிவு செய்கிறார். கேயாரின் உதவியாளர் எம்.ஜெயபிரகாஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் கதை. பெற்றோர்களுக்கும், அவரது குழந்தைகளுக்குமான இடைவெளி பற்றி பேசுகிறது படம். அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்தாலும் முகம் பார்க்காமல் வாழ்கிற நவீன வாழ்க்கை முறை குறித்து பேசுகிறது. அவந்திகாதான் கதையின் நாயகி. அவருடன் அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற ஆறு சிறுவர், சிறுமியர்கள் வானரப்படைகளாக நடிக்கிறார்கள். 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக இந்த சிறுவர் சிறுமிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். என்றார் ஜெயபிரகாஷ்.