'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பமானது. ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமான ஒரு வாரத்திற்குள் படத்தின் நாயகி மாற்றப்பட்டுள்ளார். அமலா பால் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.
முதலில் இந்தப் படத்தில் சமந்தா தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு இந்த ஆண்டில் திருமணம் நடக்க இருப்பதால் படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாகத்தான் அமலா பாலை ஒப்பந்தம் செய்தனர். இப்போது அவரும் மாற்றப்பட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் குடும்பத் தலையீடா அல்லது உண்மையிலேயே அமலா பாலுக்கு கால்ஷீட் பிரச்சனையா என்பதுதான் கோலிவுட்டின் இன்றைய சூடான டாபிக் ஆக உள்ளது.
அமலா பால் தற்போது 'திருட்டுப் பயலே 2, வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடித்து முடித்துவிட்டார். விஷ்ணு விஷாலுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அரவிந்த் சாமியுடன் 'பாஸ்கர் தி ராஸ்கல்' மலையாளப் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரையும் விட தனுஷ்தான் முன்னணி ஹீரோ என்பது உண்மை. அப்படியிருக்க வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் 'வட சென்னை' படத்தில் இருந்து அவர் விலகியிருப்பது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.
கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் விலகினார் என்று கூறப்பட்டாலும் அது உண்மையில்லை என்கிறார்கள். தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நாயகியாக நடித்து முடித்துள்ள நிலையில் மீண்டும் அவர் தனுஷுடன் 'வட சென்னை' படத்தில் நடிப்பது தனுஷ் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபகாலமாகவே அமலா பால், தனுஷ் பற்றி வதந்திகளும், விமர்சனங்களும் றெக்கை கட்டி பறந்தன. இதைதடுக்க நினைத்த தனுஷ், இயக்குநர் வெற்றி மாறனிடம் கலந்து பேசி வட சென்னை படத்தில் அமலாபாலை நீக்கும்படி சொன்னதாகவும், அதனால் தான் அவர் நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். விலகல் என்பதற்கும் நீக்கம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.