மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'தேவி' படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகி வருகிறது 'வனமகன்'. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தெலுங்கு 'அகில்' பட புகழ் சாயீஷா நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டைப்பெற்றது.
வனமகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து துல்கர் சல்மான், பார்வதி நடித்து மலையாளத்தில் ஹிட்டான 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கை மாதவன், சாய் பல்லவியை வைத்து இயக்க கமிட்டாகியிருந்தார் ஏ.எல்.விஜய்.
இதற்கிடையில், சார்லி படத்துக்கு முன் குறுகிய காலகட்டத்தில் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் ஏ.எல்.விஜய். நாயகிக்கு முக்கியத்துவமுள்ள ஹாரர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. ஒரே ஷெட்யூலில் முப்பதே நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார் விஜய். ஏ.எல்.விஜய்யின் முந்தைய படமான 'தேவி' ஹாரர் காமெடி படமாக வெளியானது.