விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
கோலிவுட்டில் இப்போது, அதிதி ராவ் பற்றித் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. மணிரத்னம் படத்தின் நாயகி என்ற பெருமையுடன், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் அதிதி, பாலிவுட் மற்றும் டோலிவுட்டிற்கு ஏற்கனவே அறிமுகமானவர். காற்று வெளியிடை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில், மிகவும் ஆர்வமாக பங்கேற்று வருகிறார் அதிதி. அந்த நிகழ்ச்சிகளுக்கு, அவர் அணிந்து வரும் உடைகள், கோலிவுட்டில் உள்ள சக நடிகையர் மத்தியில் பொறாமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு, புதுப்புது டிசைனில் உடைகளை அணிந்து வருகிறார், அவர். லேசான மேக் அப், காந்த புன்னகை என, அனைவரையும் கவரும் வகையில் தோற்றமளிக்கும் அதிதிக்கு, இப்போது, 30 வயதாகிறது என்பது தான், நம்ப முடியாத விஷயம்.