மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சில வருடங்களுக்கு முன் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் செல்வராகவன் ஒருகட்டத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்திக்க ஆரம்பபித்தார். தனித்துவமான இயக்கத்திற்கு பெயர் போனவராக இருந்தாலும் இரண்டாம் உலகம் போன்ற படங்கள் செல்வராகவனின் பெயரை காலி பண்ணிவிட்டன. அதனால் கடும் நெருக்கடிக்கு ஆளானவர் சிம்புவை வைத்து படம் இயக்கினார்.
சிம்பு எல்லா இயக்குநரையும் டார்ச்சர் பண்ணுவதுபோல் செல்வராகவனையும் டார்ச்சர் பண்ண, ஈகோவை விட முடியாத செல்வராகவன் ஒருகட்டத்தில் சிம்பு நடித்த படத்தையே ட்ராப் பண்ணிவிட்டார். அதன் பிறகு, எஸ். ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா ஆகியோரை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கி முடித்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில்இப்படத்திக் பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நெஞ்சம் மறப்பதில்லை படம் சில தினங்களுக்கு முன் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு U/A சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு.
வழக்கமாக U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டால்... அய்யோ.... வரிவிலக்கு போச்சே என்று தயாரிப்பாளர்கள் அலறுவார்கள். நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்தது பற்றி தயாரிப்பாளர் எஸ்கேப் மதன் மகிழ்ச்சியில் உள்ளார். காரணம்... படத்தை பார்த்துவிட்டு A சான்றிதழ் கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்தாராம். அதனால் தற்போது U/A கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் இணைந்திருக்கிறது என்பது உப தகவல்.