மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாண்டியராஜனுக்கு ஜோடியாக 1995ல் 'தாய்க்குலமே தாய்க்குலமே' படத்தில் அறிமுகமானவர் தான் கன்னட நடிகை வினயா பிரசாத். ஆனால் இவரை அனைவருக்கும் நன்றாக தெரிய வைத்தது 2004ல் வெளியான சந்திரமுகி படம் தான். நாசரின் மனைவியாக அதில் நடித்திருந்தார். ஆச்சர்யமாக 1993ல் வெளியான அதன் ஒரிஜினலான 'மணிச்சித்திரத்தாழு' படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தவரும் இவர்தான். கன்னடத்தில் அறிமுகமான இவர் தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் கன்னடம், மலையாளம் என சுமார் 150 படங்களில் நடித்துள்ளார்..
இப்போது புதிதாக டைரக்சன் துறையிலும் குதித்துள்ளார் வினயா பிரசாத். படத்தின் பெயர் 'லட்சுமிநாராயணா பிரபஞ்சனே பேரே'. இந்தப்படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் கதாநாயகியாகவும் இவர் தான் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமல்ல இவரது கணவர் ஜோதி பிரகாஷும், மகள் ப்ராதமா பிரசாத்தும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்களாம். ஆக மொத்தத்தில் குடும்ப படம் என்று கூட இதை சொல்லலாம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் 20ஆம் தேதி துவங்க இருக்கிறது.