மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் கணேசன், புதுக்கோட்டையில், ராமசுவாமி ஐயர் - கங்கம்மா தம்பதிக்கு, 1920 நவ., 17ல் பிறந்தார். முதலில் ஆசிரியர் பணியில் இருந்த இவர், பின், புகழ் பெற்ற சினிமா தயாரிப்பு நிறுவனமான, ஜெமினி ஸ்டூடியோவில், மேலாளராக சேர்ந்தார். 1947ல், மிஸ் மாலினி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.காதல் மன்னன் என, அழைக்கப்பட்ட இவர், வஞ்சிக் கோட்டை வாலிபன், கல்யாண பரிசு உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில், நடித்துள்ளார்.ஜெமினி நிறுவனத்தில் பணிபுரிந்து, அவர்கள் தயாரித்த பல படங்களில் நடித்ததால், ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்து விட்டது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில், 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிலிம்பேர், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றார். சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களால் அவதியுற்ற ஜெமினி கணேசன், தன், 85வது வயதில், 2005, மார்ச், 22ல் காலமானார். அவர் இறந்த தினம், இன்று.