விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஒவ்வொரு வாரமும் வெளிவரும் படங்களில் எந்தப் படம் ரசிக்க வைக்கும், எந்தப் படம் வாங்கியவர்களையும் சேர்த்துக் காப்பாற்றும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 17ம் தேதி “ப்ரூஸ்லீ, கட்டப்பாவ காணோம், ஒரு முகத்திரை, வாங்க வாங்க, கன்னா பின்னா' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'ப்ரூஸ்லீ, கட்டப்பாவ காணோம்' ஆகிய படங்கள் ஓரளவிற்கு ஓடிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படங்களாக அமைந்தன.
இரண்டு படங்களிலும் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்து காணப்பட்டது படம் பார்க்கச் சென்ற குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இரண்டு படங்களிலுமே ஆபாசம் தொனிக்கும் மிக மோசமான காட்சிகள் இருந்ததைக் கண்டு பலரும் முகம் சுளித்துள்ளனர். இரண்டு படங்களுக்கும் எப்படி 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள் என்பதும் திரையுலகத்தில் உள்ளவர்களையே யோசிக்க வைத்துள்ளது.
அதிலும், ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து இப்படிப்பட்ட படங்களில் நடித்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நாயகனாக அறிமுகமான முதல் படம் தவிர, அடுத்து வெளிவந்த படங்களில் பெண்களைத் தரக்குறைவாகப் பேசும் காட்சிகளிலும், ஆபாச வசனங்களைப் பேசியும் நடித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'கட்டப்பாவ காணோம்' படத்திலும் படம் முழுவதிலுமே இரட்டை அர்த்த வசனக் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. இன்றைய இளம் இயக்குனர்கள் இப்படிப்பட்ட படங்களை எடுத்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற தவறான கண்ணோட்டத்தில் இருக்கிறார்களோ என்று சந்தேகப்பட வைக்கிறது.