'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பாகுபலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அனுஷ்கா திடீர் என உடல் எடை கூடி காணப்படுகிறார். அவரது குண்டான தோற்றத்தை தெலுங்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தனது உடல் எடை அதிகரித்தது ஏன்? என்பது குறித்து அனுஷ்கா அளித்துள்ள விளக்கம் வருமாறு:
பாகுபலி முதல் பாகத்தின் தோற்றத்திலேயே இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளேன். சிங்கம் 3 படத்தில் நடித்தபோது ஒரு விபத்தில் சிக்கினேன். படத்தில் நடித்து முடித்த உடன் சிகிச்சை எடுத்தேன். பல நாட்கள் பெட் ரெஸ்ட்டில் இருந்தேன். இதனால் வழக்கமான உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்ய முடியவில்லை. இதனால் உடல் எடை சற்று கூடிவிட்டது. ஏற்கெனவே பல படங்களுக்காக உடல் எடையை கூட்டியும், குறைத்தும் இருக்கிறேன். இது எனக்கு பெரிய விஷயம் இல்லை. இப்போது தீவிர உடற்பயிற்சியில் இருக்கிறேன். விரைவில் எடையை குறைத்து விடுவேன். என்கிறார் அனுஷ்கா.