பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு |

நடிகர் கமல்ஹாசன், நாளை ஞாயிறன்று முக்கிய வக்கில்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். ஜல்லிக்கட்டு, தமிழக அரசியல் என அடுத்தடுத்து டுவிட்டரில் தனது குரல்களை ஓங்கி ஒலிக்க செய்த நடிகர் கமல்ஹாசன், இந்தியா-பிரிட்டன் கலாச்சார விழாவிற்காக லண்டன் சென்றிருந்தார். தற்போது சென்னை திரும்பியுள்ள கமல் நாளை வக்கில்களுடன் திடீர் சந்திப்பு நடத்த உள்ளார். தமிழகம் முழுவதும் முக்கிய வக்கில்களை நாளை சென்னைக்கு வரவழைத்து முக்கிய ஆலோசனை செய்கிறார். அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடக்கவுள்ளது. இந்த தகவலால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்புடன் காணப்படுகிறது.