'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? |

பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ராவின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான பல அதிர்ச்சிகரமான வீடியோக்கள், போட்டோக்கள் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல இன்னும் பல பிரபலங்களின் லீலைகள் வெளியாகும் என அதிர்ச்சி தகவலும் வெளியாகின. ஆனால் இது எல்லாவற்றையும் சுசித்ரா மறுத்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும், தான் எந்த கருத்தும் பதிவிடவில்லை என்றும் கூறியிருந்தார். இருந்தாலும் அவரது பெயரில் வெளியிடப்பட்ட போட்டோக்களில் நடிகை சஞ்சித ஷெட்டியின் நிர்வாண படமும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து சஞ்சிதா ஷெட்டி விளக்கம் வீடியோ வடிவில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‛‛நேற்று முதல் டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் நடப்பதை நான் அறிவேன். சமூகவலைத்தளத்தில் உலவும் அந்த போட்டோ என்னுடையதல்ல, உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.