மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிம்புவின், ரசிகை நான் என்று கூறியிருக்கிறார் நடிகை அமலாபால். தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் அடுத்து சிம்புவை வைத்து வடசென்னை என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க எந்த நடிகையும் ஒத்துக்கொள்ளாத நிலையில், கடைசியாக மைனா அமலாபாலை அணுகினர். முதலில் ஓ.கே சொல்லியிருந்த அவரும், சில நாட்களுக்குப்பிறகு நீங்கள் கேட்ட தேதியில் தெலுங்கு படம் இருக்கிறது என்று சொல்லி தனது இயலாமையை தெரிவித்து விட்டாராம். இதனால் சிம்பு படம் என்றதும் அந்த வாய்ப்பை அமலாபால் தவிர்த்ததாக செய்திகள் பரவின.
இந்த செய்தியை அமலாபால் முன்வைத்தபோது, தமிழில் எனக்கு பிடித்த சில நடிகர்களில் சிம்புவும் ஒருவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப்பார்த்து நான் அவரது ரசிகையாகி விட்டேன். அப்படிப்பட்ட நடிகருடன் நடிக்க சான்ஸ் வந்தபோது ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஆனால் அவர்கள் கால்சீட் கேட்ட அதே தேதியில் ஒரு தெலுங்கு படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்ததால் நிலைமையை அவர்களிடம் சொல்லி விலகி விட்டேன். இதுதான் நடந்தது. மாறாக, சிம்பு படம் என்பதால் நான் தவிர்த்ததாக பரவிய செய்தி தவறானது என்கிறார் அமலாபால்.