மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரொமான்டிக் ஹீரோயினிகளாக நடிப்பவர்களை விட நெகடீவ் ஹீரோயினாக நடிப்பவர்கள் ஒரே படத்தில் உச்சத்துக்கு சென்று விடுவதுண்டு. அதற்கு உதாரணம் ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் நெகடீவ் ஹீரோயினியாக நடித்த அவர் இன்றுவரை பேசப்பட்டு வருகிறார். அதோடு, கேரியரில் ஒரு படத்திலாவது அந்த மாதிரி ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்று பல நடிகைகள் குறிப்பிட்டும் வருகிறார்கள்.
அதை மனதில் கொண்டுதான் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் நெகடீவ் ஹீரோயினாக பிரணிதா நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது சாந்தனு நடித்துள்ள முப்பரிமாணம் படத்தில் சிருஷ்டிடான்கேயும், பகட்டான வாழ்க் கைக்காக காதலுக்கு துரோகம் செய்யும் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த வேடத்தில் நடிக்க முதலில் எந்த நடிகையும் ஒத்துக்கொள்ளவில்லையாம். ஆனால் சிருஷ்டிடான்கேயிடம் சொன்னபோது, இதுவரை பாசிட்டிவான நடிகையாக நடித்து எந்த பெயரும் கிடைக்கவில்லை.
அதனால் ஒரு நெகடீவ் அப்ரோச் செய்து பாக்கலாமே என்று சவாலாக எடுத்து நடித்திருக்கிறார். அந்த நடிப்புக்கு அவர் எதிர்பார்த்ததை விட நல்ல விமர்சனங் கள் கிடைத்துள்ளதாம். அவரை தொடர்பு கொள்ளும் கோலிவுட் நண்பர்கள், நடிப்பில் உங்களது இன்னொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இப் படி, தனக்கு சாதனமாக விமர்சனங்கள் எழுந்திருப்பதால், இனிமேல் என் திற மைக்கு சவாலாக அமையும் எந்தமாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று ஒரு செய்தியை கோலிவுட்டில் உலவ விட்டிருக்கிறார் சிருஷ்டிடான்கே.