மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரகாஷ்ராஜின் டோனி படத்தில் தமிழுக்கு வந்த ராதிகா ஆப்தே, அதன்பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் இந்தி படங்களில் நடிக்க சென்று விட் டார். அப்படி சென்றவரைத்தான் ரஜினியின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடி யாக நடிக்க வைக்க அழைத்து வந்தார் டைரக்டர் ரஞ்சித். அந்த படத்தில் ராதிகா ஆப்தே கமிட்டானபோது அதன்பிறகு தமிழில் முன்னணி நடிகையாகி விடு வார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கபாலிக்குப்பிறகு ஒரு படத்தில்கூட கமிட்டாகவில்லை ராதிகா ஆப்தே.
இந்நிலையில், தற்போது ராதிகா ஆப்தே நாயகியாக நடித்துள்ள உலா படம் திரைக்கு வரத்தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை முரண் படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. பைனான்ஸ் பிரச்சினையால் காலதாமதமாகி வந்த இந்த படத்தை கபாலி படம் வெளியானபோது வெளியிட முயற்சித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தற்போது அந்த படத்தை வெளியிடும் வேலைகளில் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.