ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
ஜல்லிக்கட்டு விவகாரத்தினால் டிவிட்டரை விட்டு விலகிய த்ரிஷா காதலர் தினம் முதல் மீண்டும் டிவிட்டரில் தீவிரமாக பதிவிட்டு வருகிறார். அதிலும் கடந்த சில தினங்களாக அவர் நடிக்கும் புத்தம் புது படங்களைப் பற்றி மகிழ்ச்சி பொங்க புதுப் புதுத் தகவல்களைத் தெரிவித்து வருகிறார்.
எத்தனையோ இளம் ஹீரோயின்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் 30 வயதைக் கடந்த த்ரிஷாவிற்கு இந்த 2017ம் வருடத்தில் பல புதுப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளாக வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
த்ரிஷா தனி கதாநாயகியாக நடிக்கும் 'மோகினி', அரவிந்த் சாமியுடன் நடிக்கும் 'சதுரங்க வேட்டை 2', கதாநாயகிக்கு முக்கிய்த்துவம் உள்ள 'கர்ஜனை, 1818', விஜய் சேதுபதியுடன் '96', நிவின் பாலியுடன் மலையாளத்தில் அறிமுகமாகும் 'ஹே ஜுட்', விக்ரமுன் 'சாமி 2' என 7 படங்களில் தற்போது நடித்து வருவதாக த்ரிஷா தன்னுடைய அளவு கடந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்த் திரையுலகத்தில் பல இளம் ஹீரோயின்கள் கடும் போட்டியைக் கொடுத்தாலும் 30 வயதைக் கடந்த த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் கைவசம் பல படங்கள் இருப்பதைப் பார்த்து திரையுலகத்தில் உள்ள பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
த்ரிஷா தற்போது நடித்து வரும் இந்த 7 படங்களும் 2017ம் ஆண்டிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.