மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகிக்கொண்டிருக்கும் நடிகை கள் பட்டியலில் இணைந்திருக்கும் இன்னொரு நடிகை ஸ்ரீவித்யா நாயர். இவர் மலை யாளத்தில் கேம்பஸ் டைரி -என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது தமிழில் கனலி என்ற படம் மூலம் என்ட்ரியாகியிருக்கிறார் ஸ்ரீவித்யா.
மேலும், மலையாளத்தில் முதல் படத்திலேயே கவர்ச்சிகரமான நாயகியாக நடித்தவர், தமிழிலும் முதல் என்ட்ரியே பேசப்பட வேண்டும் என்பதற்காக ஓரளவு கிளாமர் நாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் இருந்து வரும் நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கண்டிசன் போட்டு நடிக்கும் நிலையில், இவர் கதைக்கேற்ப கிளாமராக நடிப்பது கோலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி ஸ்ரீவித்யா நாயர் கூறுகையில், நான் நயன்தாராவின் தீவிரமான ரசிகை. ஹோம்லியான வேடம், கிளாமரான வேடம் என எதுவாக இருந்தாலும் அதில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவார் நயன்தாரா. அதனால் அவரை ரோல் மாடலாகக் கொண்டு நடிக்கும் நானும், எந்த மாதிரியான கதைகள் என்றாலும் அதற்கேற்ப என்னை முழுமையாக மாற்றி நடிப்பேன். கூடிய சீக்கிரமே தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடிப்பேன் என்கிறார் ஸ்ரீவித்யா நாயர்.