ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
புதுமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கும் காதல் நகரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஆஸ்திரேலிய மாடல் அழகி சபிஜே. அடுத்து ஏனிந்த மயக்கம் படத்தை இயக்கிய சக்தி வசந்த் பிரபுவின் அடுத்த படத்திலும் நடிக்க இருக்கிறார். சினிமாவில் நடிக்க வந்தது பற்றி அவர் கூறியதாவது:
நான் தமிழ்ப் பெண்தான். எங்களுக்கு பூர்வீகம் இலங்கை. அங்கிருந்து அப்பா அம்மா எல்லாரும் நியூசிலாந்து போய் தங்கிவிட்டனர். நான் அங்குதான் பிறந்தேன். படித்தது ஆஸ்திரேலியாவில். பி.காம் முடித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் எனக்கு மாடலிங் மீது ஆர்வம் வந்தது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று இரு நாடுகளிலும் பல மியூசிக் வீடியோக்களில் தோன்றியிருக்கிறேன். ஆஸ்திரேலிய அரசு விளம்பரம் உள்பட பல விளம்பரங்களிலும் நடித்தேன்.
எனக்கு பங்கரா நடனம் தெரியும். இந்த பங்கரா என்கிற பஞ்சாபி நடனத்தை மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றுக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அங்குள்ள தார் பஞ்சாபன் என்கிற பஞ்சாபி நடனக் குழுவில் நிறைய மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆடியிருக்கிறேன். பல்வேறு ப்ரமோஷன் ஷோக்களிலும் மாடலாகக் கலந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருந்த நான் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி வரை சென்று இருக்கிறேன்.
எனக்கு சினிமா மீது எப்போதும் ஆர்வம் உண்டு .அங்கு தமிழ்ப் படங்கள் நிறைய பார்ப்பேன். வீட்டில் பெற்றோர் கூட அதிகம் தமிழ் பேசாவிட்டாலும் நான் தமிழ்ப் படங்கள் பார்த்து தமிழைப் புரிந்து கொள்வேன். என் புரொஃபைல் பார்த்து எனக்கு இங்கிருந்து மாடலிங்கிற்கு அழைப்பு வந்தது. இங்கு வந்து ஜேடி ஜெரியின் விளம்பரத்தில் நடித்தேன் .
றெக்க படப்பிடிப்புக்கு ஒரு நாள் போனேன். நடிகர் விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொண்டேன். அதைப் பார்த்த அந்தப் படத்தின் கேமராமேன் தினேஷ், தான் பணியாற்றும் அடுத்த படத்துக்கு என்னைப் பரிந்துரை செய்து இருக்கிறார். அப்படி வந்த வாய்ப்புதான் நான் நடிக்கும் புதிய படம்., இயக்குநர் எம்.ஏ.பாலாவின் காதல் நகரம் படம். மோசஸ் இயக்கத்தில் ஸ்ட்ரீட் பைட்டர் என்கிற தமிழ் டெலிபிலிமிலும் நடித்துள்ளேன். படப்பிடிப்பு பார்க்க வந்த எனக்கு பட வாய்ப்பே கிடைத்து விட்டது என்றார் சபிஜே.