மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நயன்தாரா கதையின் நாயகியாக உருவெடுத்ததில் இருந்து அவர் நடித்த படங்களின் பர்ஸ்ட் லுக், டீசருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், டைரக்டர் சற்குணம் தயாரிப்பில், தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள டோரா படத்தின் சிங்கிள் டிராக்கிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதனால் நயன்தாரா நடித்த முந்தைய படங்களை விட இந்த படம் மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மார்ச் 3-ந்தேதி இந்த டோரா படம் திரைக்கு வரும் என்று கூறப்படும் நிலையில், வருகிற 17-ந்தேதி அப்படத்தின் டீசரை வெளியிடுகிறார்கள். ஏற்கனவே நயன்தாரா நடித்த மாயா படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஹாரர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசரிலேயே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று சிஜி ஒர்க் மூலம் டீசரை மிரட்டலாக உருவாக்கியிருக்கிறார்களாம்.