மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை விஜயலட்சுமி தனது காதல் கணவர் பெரோஸிற்காக தயாரிக்கும் படம் பண்டிகை. பெரோஸ் இயக்கும் இந்தப் படத்தில் கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா, கருணாஸ், சரவணன், பிளாக் பாண்டி, மதுசூதனராவ் நடிக்கிறார்கள். ஆர்.எச்.விக்ரம் இசை அமைத்துள்ளார், அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதைவிட அதிகமானதில் விஜயலட்சுமி அப்செட் ஆனார். இதனால் கணவருடன் சண்டை போட்டு பிறகு சமாதானமானார். படம் தயாராகியும் அதை வெளியிடுவதில் தொடர்ந்து பொருளாதார சிக்கல் இருந்து வந்தது. தற்போது படத்தை ஆரா சினிமாஸ் வாங்கியுள்ளது. வருகிற மார்ச் 9ந் தேதி படம் வெளிவருகிறது.
"கை ஓங்கினால் தான், நினைத்தது கிடைக்கும் என்று எண்ணும் ஒரு கோபமான அனாதை இளைஞன், ஒரு கட்டத்தில் தான் எண்ணியது தவறு என்பதை உணர்ந்து கொள்கிறான். இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவன் தன் காதலிக்காக நிழல் உலக தாதாக்கள் நடத்தும் ஒரு சண்டையில் கலந்து கொள்ள நேரிடுகிறது. அதில் இருந்து எப்படி அவன் வெளியே வருகிறான் என்பது தான் படத்தின் கதை. விநியோக துறையில் பிரபலமாக விளங்கும் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ் எங்கள் படத்தை உலகமெங்கும் வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. படம் வெளியாகும் நாளான மார்ச் 9 ஆம் தேதி, எங்கள் அனைவருக்கும் பண்டிகை நாளாக இருக்கும்." என்கிறார் இயக்குநர் பெரோஸ்.