மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலாஜி சக்திவேல் இயக்கிய ‛வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுமானவர் நடிகை மனிஷா யாதவ். தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர், அதன்பின்னர் வாய்ப்பு கிடைக்காததால் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, சென்னை-28 II படங்களில் ஒருபாட்டுக்கு ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில், நடிகை மனிஷா திருமணம் பந்தத்தில் இணைந்துள்ளார்.
மனிஷா, பெங்களூரை தொழில் அதிபர் வர்னித்தை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். சமீபத்தில் இந்த காதல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை.
மனிஷா, தனது திருமணம் குறித்த பதிவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதோடு, திருமணத்தில் முடிய உதவிய குடும்பத்தார், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.