மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதால் போலீஸ் மீது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதற்கு நேர்மாறாக தமிழ்நாடு போலீஸ் புராணம் பாடும் சி-3 படம் தற்போது வெளியாகி உள்ளது. போலீஸ் மீதான அதிருப்தி சி-3 படத்தின் வசூலை பாதித்துவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளது சூர்யா தரப்பு.
இதேபோன்றதொரு சிக்கல் எமன் படத்துக்கும் ஏற்பட்டுள்ளது. 'சைத்தான்' படத்தை தொடர்ந்து விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'எமன்'. 'லைகா புரொடக்ஷன்ஸு'ம் விஜய் ஆன்டனியின் 'விஜய் ஆன்டனி ஃபிலிம் கார்பரேஷன்' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் தியாகராஜன், சங்கிலி முருகன் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் சமீபத்தில் தணிக்கைக்கு சென்றது. எமன் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அனைவரும் பார்க்க கூடிய படம் என்று 'U' சான்றிதழ் வழங்கியது. தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் எமன் படத்தை இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அரசியல் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மாறாக இருக்கிறதாம். எனவே எமன் படத்தை இப்போது வெளியிடலாமா அல்லது சில வாரங்கள் தள்ளி வெளியிடலாமா என 'லைகா புரொடக்ஷன்ஸு'ம் விஜய் ஆன்டனியும் ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.