மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் கதைகள் வந்தது உண்டு, வந்து கொண்டும் இருக்கிறது. ஆனால், சினிமாவில் வரும் காதல் கதைகளை விட நிஜ வாழ்வில் நடக்கும் காதல் கதைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும். சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகள் தங்களுக்குள் காதல் இல்லை என்று ஆணித் தரமாகப் பேசுவார்கள். இருந்தாலும் அடுத்த சில வாரங்களிலோ, மாதங்களிலோ திடீரென திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள்.
இப்படி பல காதல் கல்யாணத்தை தமிழ் சினிமாவும் பார்த்துவிட்டது, தமிழ் ரசிகர்களும் பார்த்துவிட்டார்கள். நடிகர் ஜெய்க்கும், நடிகை அஞ்சலிக்கும் காதல் என அவ்வப்போது கிசுகிசுக்கள் எழுவதும், பின்னர் அவை அடங்கிப் போவதும் உண்டு. ஆனால், அந்த கிசுகிசுக்களை அவர்களே உண்மையாக்கிவிடுவார்கள். ஜெய், அஞ்சலி காதல் விவகாரத்திலும் விரைவில் இப்படி நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கடந்த வாரம் ஜோதிகா நடித்த 'மகளிர் மட்டும்' படத்தின் டீசர் வெளியானது. அந்தப் படத்தில் இடம் பெற்ற 'தோசை' விஷயத்தை அப்படியே படத்தின் பிரமோஷனுக்கு உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். அவ்வளவுதான் பல நடிகர்கள், பிரபலங்கள் அவர்களது வீட்டில் தோசை சுட ஆரம்பித்து டிவிட்டரில் பதிவு செய்தார்கள்.
அப்படி 'தோசை' சுட்டு புகைப்படங்களுடன் பதிவிட்டவர்களில் நடிகர் ஜெய்யும் ஒருவர். ஆனால், அவருக்காக தோசை சுட்டுக் கொடுத்தார் என்பதுதான் விஷயமே. அவர் ஆசையாக தோசை சுட்டது அஞ்சலிக்காக. அதை இரண்டு நாட்களுக்கு முன்பு புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார். ஒரு வீட்டில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்கள் ஒரு படப்பிடிப்பு தளமாகக் கூட இருக்கலாமே என்ற கேள்வி எழும்.
அதையெல்லாம் மீறி அஞ்சலி பதிவிட்டதுதான் அதில் ஹைலைட். “ம்ம்ம்..சுவையான தோசை 'ஜெ'. உங்களுக்கு மிக நெருக்கமானவர் உங்களுக்காக சமைப்பதைப் பார்ப்பது எவ்வளவு அன்பான விஷயம்” என ஜெய் டிவீட்டை ரிடிவீட் செய்திருந்தார். மக்களே, ஜெய்க்கும், அஞ்சலிக்கும் காதலா என படங்களைப் பார்த்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.