மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
முன்பெல்லாம் வருடத்திற்கு நான்கைந்து படங்கள் சில்வர் ஜுப்ளி கொண்டாடும். அதாவது 25 வாரங்கள், 175 நாட்கள். இப்போது நான்கு நாள் ஓடினால் அது வெற்றிப்படம் என்ற நிலை வந்து விட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சந்திரமுகிக்கு பிறகு எந்த படமும் வெள்ளி விழா கொண்டாடவில்லை.
இந்தநிலையில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ் நடித்த கபாலி படத்தை 175 நாட்கள் ஓட வைத்து வெள்ளி விழா விளம்பரம் வெளியிட்டு விட்டார் தாணு. ஆனாலும் ஒரு வருடம் வரை படத்தை ஓட்டி ஆண்டு விழா கொண்டாடியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.
கபாலி படம் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் 50 நாட்கள் ஓடியது. சுமார் 25 தியேட்டர்களில் ஓரிரு காட்சிகளாக 100 நாட்கள் ஓடியது. மதுரையில் உள்ள மணி இம்பாலா தியேட்டரில் ஓரிரு காட்சிகளாக 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா வரைக்கும் வந்தது. அதன் பிறகு ஒரு காட்சியாக தற்போது 200 நாட்கள் வரை வந்துள்ளது. தினசரி நடக்கும் ஒரு காட்சியிலும் திருப்திகரமான அளவிற்கு ரசிகர்கள் படம் பார்க்க வருவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.