விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சினிமாவில் இசையமைப்பாளராக மட்டுமே இருந்து வந்த ஏ.ஆர்.ரகுமான் இப்போது இயக்குனராகவும் உருவெடுத்திருக்கிறார். அதனால் முன்பை விட அதிக பிசியாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அதேசமயம் டுவிட்டரிலும் சில சமயங்களில் கமெண்ட் போட்டும் வருகிறார். பெரும்பாலும், மற்ற இசையமைப்பாளர்களின் இசையைப்பற்றி அவர் கமெண்ட் கொடுப்பதில்லை. ஆனால் தற்போது சாந்தனு நடித்துள்ள முப்பரிமாணம் படத்தின் பாடலுக்கு கமெண்ட் கொடுத்துள்ளார்.
அதாவது, அதிரூபன் இயக்கத்தில் சாந்தனு-சிருஷ்டி டான்கே நடித்துள்ள படம் முப்பரிமாணம். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரொமோ பாடல் வீடியோ ஜனவரி 30-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து லைக் கொடுத்துள்ளனர். இந்நிலையில், யு-டியூப்பில் அந்த பாடலை பார்த்து ரசித்த ஏ.ஆர்.ரகுமானும், குட்லக் என்று டுவிட் செய்துள்ளார். இதனால், இன்ப அதிர்ச்சியடைந்த முப்பரிமாணம் படநாயகன் சாந்தனு, அவருக்கு தனது நன்றிகளை உரித்தாக்கியுள்ளார். அதேபோல் இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமானின் அக்காள் மகனான ஜி.வி.பிரகாசும் தனது பிரொமோ பாடலையும் சேர்த்துதான் வாழ்த்தியிருக்கிறார் என்பதால் அவரும் சொல்லமுடியாத சந்தோசத்தில் இருக்கிறாராம்.