விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‛என்று தணியும்'. பாரதிராஜாவிடம் பல படங்களில் பணியாற்றியவர் என்பதால் அவரது பாணியிலேயே பக்கா கிராமத்து கதையில் அப்படத்தை இயக்கியிருந்தார் பாரதி கிருஷ்ணகுமார். நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடித்த அந்த படத்தில் ஜீவிதா, சாந்தனா ஆகியோரும் நடித்திருந்தனர். ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.
இருப்பினும் அந்த படத்தை அடுத்து அந்த 60 நாட்கள் என்றொரு படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார் யுவன் மயில்சாமி. ஒருநாள் கூத்து படம் பாணியில் ஒரு கல்யாணத்தை மையமாக கொண்ட கதையில் இந்த படம் தயாராகியுள்ளது. ஆனால், படத்தின் அனைத்துகட்ட வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் படம் வியாபாரமாகவில்லை. ஆக, முதல் படமும் தோல்வி, இரண்டாவது படமும் வெளியாகவில்லை என்பதால் அடுத்தபடியாக புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் அதிர்ச்சியில் காணப்படுகிறார் யுவன் மயில்சாமி.