மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானவர் பிரஜன். அதையடுத்து சீரியல்களிலும் நடித்து வந்த அவர், சினிமாவிலும் சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். அதோடு, தீக்குளிக்கும் பச்சைமரம், மணல் நகரம் ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். அதையடுத்து அஜீத்தின் மச்சான் ரிச்சர்ட் நாயகனாக நடித்த பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்திலும் இன்னொரு ஹீரோவாக நடித்த பிரஜனுக்கு அடுத்தபடியாக மிரண்டவன் என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் சமுத்திரகனி நாயகனாக நடித்து வரும் ஆண்தேவதை படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது நடித்து வரும் இரண்டு படங்களுமே வெற்றி பெற்று சினிமாவில் தனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று நினைக்கும் பிரஜன், இந்த நேரத்தில் சின்னத்திரையிலும் ஒரு கால் பதித்திருந்தால் சினிமாவில் பெரிதாக இடம்பிடிக்க முடியாது என்பதால் தற்போது தன்னைத் தேடி வந்தசில சின்னத்திரை வாய்ப்புகளை தவிர்த்து விட்டு முழுநேர சினிமா நடிகராகியிருக்கிறார்.