கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது |
விஜய்யின் 'பைரவா' படத்துடன், ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ', விஜய் சேதுபதியின் 'புரியாத புதிர்', பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வரவிருப்பதாக அறிவித்திருந்தார்கள். இவற்றில் ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' படம் பொங்கல் ரிலீஸ் போட்டியிலிருந்து பின் வாங்கிவிட்டது.
பொங்கலுக்கு ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' படம் ரிலீசாகவில்லை என்றாலும் ஸ்ரீகிரீன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சரத்குமாருடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வரும் மற்றொரு படமான் 'அடங்காதே' படத்தின் டீஸரை பொங்கலுக்கு வெளியிட உள்ளனர்.
அதாவது, விஜய்யின் 'பைரவா' படத்துடன் அனைத்து தியேட்டர்களிலும் அடங்காதே டீஸரை திரையிட திட்டமிட்டுள்ளனர்'அடங்காதே' படத்தை சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக , கதாநாயகியாக சுரபி நடிக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். கதாநாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷே இசை அமைக்கிறார்.
பொங்கல் பந்தயத்திலிருந்து புரூஸ்லீ படம் பின் வாங்கியது ஏன் போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் படம் ரிலீஸாகவில்லை என்கிறார்கள். அதேசமயம் புரூஸ்லீ படத்தை தயாரித்துள்ள கெனன்யா பிலிம்ஸ் தயாரித்த முந்தைய படங்கள் தோல்வியடைந்ததால், நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் புரூஸ்லீ படத்துக்கு செக் வைத்துள்ளதாகவும் கோலிவுட்டில் ஒரு தகவல் அடிபடுகிறது.