மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பீட்சாவைத் தொடர்ந்து சேதுபதி படத்திலும் விஜயசேதுபதியுடன் நடித்த ரம்யா நம்பீசன் அதன்பிறகு தமிழில் நட்புன்னா என்னான்னு தெரியுமா மற்றும் சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி சிபிராஜை வைத்து இயக்கியுள்ள இன்னும் பெயரிடாத படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பு போக மீதமுள்ள நேரத்தை அவர் பின்னணி பாடுவதில் செலவிட்டு வருகிறார்.
அந்த வகையில், மலையாளத்தில் தான் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே பின்னணி பாடி வந்த ரம்யா நம்பீசன், தமிழில் பாண்டியநாடு படத்தில்தான் முதன்முதலாக பாடினார். அந்த படத்தில் டி.இமான் இசையில் லட்சுமிமேன னுக்காக அவர் பாடிய பை பை பை கலாச்சி பை -என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து டமால் டுமீல், சகாப்தம், சகலகலா வல்லவன் ஆகிய படங்களில் பாடிய ரம்யா நம்பீசன், தற்போது திரிஷா லீடு ரோலில் நடித்துள்ள சதுரங்கவேட்டை-2 படத்திலும் அவருக்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார். அஸ்வமித்ராவின் இசையில் ரம்யா நம்பீசன் பாடிய இந்த தகவலை அப்படத்தை தயாரித்துள்ள நடிகர் மனோபாலா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.