மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பெண்கள் காதுகளில் அணியும் ஆபரணத்திற்குப் பெயர் கம்மல். இந்தக் காலத்தில் ஆண்கள் கூட அணிய ஆரம்பித்துவிட்டார்கள். விதவிதமான கம்மல் டிசைன்களை நாளுக்கு நாள் நகைக் கடைக்காரர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் எந்த ஒரு டிசைனும் திரைப்படங்களில் நடிகைகள் அணிந்த பிறகுதான் பிரபலமாகிறது. அதிலும் சிலர் எப்படி அணிந்தாலும் அது ஃபேஷன் ஆகிவிடுகிறது. அப்படிப்பட்டவர்களின் ஒருவர் நயன்தாரா.
மிகவும் நேர்த்தியாக ஆடை அணிவது, ஆபரணங்கள் அணிவது என தனக்கென தனி ஸ்டைலை ஏற்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் நயன்தாராவின் ஒரு புகைப்படம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காதில் அவர் அணிந்துள்ள கம்மல்தான் அதற்குக் காரணம். மிகவும் குட்டியாக உள்ள அந்தக் கம்மல் 'வி' என்ற ஆங்கில எழுத்தில் உள்ளது. அந்த 'வி'க்கு என்ன அர்த்தம் என்பது நாம் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
முன்பு பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டபோது அவரது பெயரை கையில் பச்சை குத்திய நயன்தாரா, இப்போது விக்னேஷ் சிவன் உடனான காதலை வெளிப்படுத்த அவரது பெயரின் முதல் எழுத்தை கம்மலாக வைத்திருக்கிறாரோ...?
கம்மலில் காதல்... அட... சினிமாவுக்கே தலைப்பாக வைக்கலாமே... !