விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ரஜினியின் எந்திரன் 2-வான ‛2.O' மற்றும் பாகுபலி-2 படங்கள் தான். தற்போது இந்தப்படங்களையும் மிஞ்சும் வகையில் ஒரு படம் உருவாக உள்ளது. தேனாண்டாள் பிலிம்சின் 100வது படமாக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படத்திற்கு ‛சங்கமித்ரா' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதை சுந்தர்.சி இயக்கயிருப்பது அனைவரும் தெரிந்ததே.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அந்த படத்தை சரித்திர பின்னணி கொண்ட கதையில் இயக்குகிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் விஜய்யை நடிக்க வைக்கும் முயற்சி முதலில் நடந்தது. ஆனால் அவர் மறுத்து விடவே, பின்னர் சூர்யாவிடம் கால்சீட் கேட்டனர். அவரும் பிடிகொடுக்கவில்லை. அதையடுத்து ஜெயம் ரவியிடம் பேசினர், அவர் சம்மதம் சொல்லிவிட்டார். இப்போது அவருடன் நடிகர் ஆர்யாவும் நடிக்க இருக்கிறார். இதை தேனாண்டாள் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதைப்பற்றி தேனாண்டாள் பிலிம்ஸ் சற்றுமுன்னர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‛‛எங்களது அடுத்தப்படமான ‛சங்கமித்ரா' படத்தை சுந்தர் சி இயக்குகிறார். ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கிறார்கள், ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்'' என அறிவித்துள்ளது.