விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
வெடி படம் எதிர்பார்த்த அளவு ஓடாமல் பிசுபிசுத்துப் போனதால் தனது அடுத்த படத்தில் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஷால். பிரபுதேவாவின் மசாலா படங்களை கமர்ஷியல் என்று கொண்டாடிய தமிழ் ரசிகர்கள் போக்கிரி படத்திற்கு பிறகு மாஸ்டரின் ஆட்டத்தை ரசிக்கவில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக வந்திருக்கும் படம்தான் வெடி. விஷால், சமீரா ரெட்டி நடித்திருக்கும் இந்த படத்திற்கு வழக்கம்போலவே எக்கச்சக்க விளம்பரங்கள் செய்யப்பட்ட போதிலும், எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லையாம்.
வெடிக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் இடத்திற்காக பிரபுதேவா வருந்தினாரோ, இல்லையோ? விஷால் வருந்தியிருக்கிறார். யாரும் சொல்லாமலேயே தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார். டைரக்டர் திரு இயக்கத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் சமரன் படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்திலிருந்து சுமார் ஒன்றரை கோடியை குறைத்துக் கொண்டாராம். தானே முன் வந்து இப்படி ஒரு முடிவெடுத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மற்ற தோல்விப்பட ஹீரோக்களும் விஷாலை பின்பற்றினால் நல்லாயிருக்குமே!