மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வேதாளம், ரெமோ படங்களின் ஹிட்டுக்குப்பிறகு அனிருத்தின் கைவசம் ஆறு படங்கள் உள்ளன. இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டி ருப்பதால், பாடல் பின்னணி இசையமைக்கும் வேலைகளில் தீவிரம டைந்துள் ளார் அவர். முக்கியமாக, அஜீத், சூர்யாவின் புதிய படங்கள் கிடைத்திருப்பதால், தனது முந்தைய ஹிட்களை முறியடிக்கும் வகையில் அதிரடியான டியூன்களை ரெடி பண்ணி இசையமைத்துக்கொண்டிருக்கிறார். அதனால் யாராவது புதிய படங்கள் சம்பந்தமாக அவரை சந்திக்க சென்றால், யாரையும் சந்திக்க நேரமில்லை என்று எஸ்கேப்பாகிக்கொண்டிருக்கிறார் அனிருத்.
இந்த நேரத்தில், வாலு பட டைரக்டர் விஜயசந்தர், விக்ரமை வைத்து இயக்கும் படத்திற்கு இசையமைக்க சில இசையமைப்பாளர்களின் பெயர்கள் பரிசீலணையில் இருந்து வந்த நிலையில, இப்போது அனிருத்தை இசையமைக்க வைத்தால் இளைஞர்களை இழுக்கலாம் என்று அவரை அணுகியுள்ளனர். ஆனால் அவரோ, கைவசம் பல படங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, நீங்கள் கேட்ட நேரத்தில் என்னால் பாடல் தர முடியாது. ரொம்ப பிசியாக இருக்கிறேன் என்று நழுவுகிறாராம். இருப்பினும், அவரை இசையமைக்க வைத்தே தீருவது என்று அப்படக்குழுவினர் தொடர்ந்து அனிருத்தை துரத்திக்கொண்டிருக்கிறார்கள்.