முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ள படம் மாவீரன் கிட்டு. ஜீவா படத்தில் அவருடன் நடித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். பார்த்திபன், சூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாடலாசிரியர் யுகபாரதி வசனம் எழுதியுள்ளார். இப்படம் டிசம்பர் 2-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது.
மேலும், வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பிறகு தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷ்ணு, முண்டாசுப்பட்டி வெற்றிக்குப்பிறகு ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்திருப்பவர், இந்த படமும் தனக்கு மெகா ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறார். அதேபோல் ஈட்டிக்கு பிறகு இந்த படம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என்று பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டி ருக்கிறார் ஸ்ரீதிவ்யா. இந்நிலையில், தணிக்கைக் குழுவுக்கு திரையிடப்பட்ட மாவீரன் கிட்டு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதை விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.