மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படம் சிம்புவுக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. ஆனால் அதன்பிறகு அவர் நடித்த வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு போன்ற படங்கள் பெரிதாக ஓடவில்லை. அதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு ஓரளவு ஓடியது. அதையடுத்து தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வெளியாகியுள்ள அச்சம் என்பது மடமையடா சிம்புவுக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. அந்த வகையில், கெளதம்மேனனுடன் அவர் இணைந்த இரண்டு படங்களுமே ஹிட்தான்.
மேலும், அச்சம் என்பது மடமையடா படம் இப்போதுவரை திரையிட்ட அனைத்து சென்டர்களிலுமே அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் சென்னையை எடுத்துக்கொண்டால் 23 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. அந்த வகையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த படம் 510 காட்சிகள் திரையிடப்பட்டு, 2 கோடியே 10 லட்சத்துக்கும் மேல் வசூலித்துள்ளதாம். தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.20 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.