மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சினிமாவில், மீண்டும் ஒரு ரவுண்டு வர காத்திருக்கும் நடிகை அமலாபால், தன், 25வது பிறந்த நாளை, தடபுடலாக கொண்டாடி உள்ளார். சிந்து சமவெளி படம் மூலம், தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். நடிகர் விஜய் உடன், தலைவா படத்தில் நடித்த பின், இயக்குனர் விஜயை திருமணம் செய்தார். பின் சினிமாவை விட்டு விலகிய அமலாபாலுக்கு, மீண்டும் சினிமா ஆசை வந்தது. கணவர் அனுமதியுடன், நடிகர் சூர்யாவுடன், பசங்க 2 படத்திலும், தனுஷ் தயாரித்த, அம்மா கணக்கு படத்திலும் நடித்தார். இப்படி, சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர நினைத்த அமலாபால், சமீபத்தில், கணவரை விவாகரத்து செய்தார். தற்போது தனுஷுடன், வடசென்னை படத்தில் நடித்து வருகிறார். தன், 25வது பிறந்த நாளை, நேற்று முன்தினம், நண்பர்களுடன் கொண்டாடிய அமலாபால், தடபுடல் விருந்து வைத்து அசத்தியுள்ளார்.