ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
விஜய் நடிக்கும் பைரவா படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் பண்டிகை தினத்திலேயே வருகிறது. விஜய் நடித்த போக்கிரி, ஜில்லா படங்கள் பொங்கல் அன்று வெளியாகி வெற்றி பெற்றன. எனவே விஜய் தற்போது நடித்து வரும் 'பைரவா'படத்தையும் பொங்கலுக்கு வெளியிட உள்ளனர். பைரவா படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டநிலையில் டப்பிங், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. விஜய் நடிக்கும் படத்திற்கு முதல்முறையாக இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
'பைரவா' பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'பைரவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து இப்போது தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீஸரை 28.10.2016 துவங்கும் நேரத்தில் அதாவது நள்ளிரவு நேரத்தில் வெளியிடவிருக்கிறார்கள்.